உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் தான் சந்திர சூட். இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வருடம் இறுதியில் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அரசு பங்களாவிலேயே தற்போது வரை தங்கி வருகிறார். இதனால் உச்சநீதிமன்றம் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது. அதில் மே 31ஆம் தேதியோடு சந்திர சூட்டிற்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் வசிக்கும் அனுமதியானது முடிவடைந்து விட்டது. ஆனால் தற்போது வரை பங்களாவை விட்டு காலி செய்யவில்ல.
எனவே அவரை பங்களாவிலிருந்து வெளியேற வைக்க வேண்டும். அதன் பிறகு பங்களாவை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் பேசுகையில், தன்னுடைய மகள்கள் மஹி மற்றும் பிரியங்கா ஆகிய இரண்டு பேருக்கும் நெமிலி மயோபதி என்னும் மரபணு பிரச்சினை உள்ளது. இது எலும்பு மற்றும் தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த குறைபாட்டால் அவர்களுக்கு தசை சிதைவு ஏற்பட்டு சுவாச அமைப்பை கடுமையாக பாதிக்க செய்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தினசரி பயிற்சி எடுத்து இருக்கிறார்கள்.
அவர்களின் வசதிக்கேற்ப இந்த பங்களா வடிவமைக்கப்பட்டது. குளியல் அறைகள் முதல் வீட்டில் உள்ள அனைத்தும் அவர்களுடைய நிலைமைக்கு ஏற்ப உள்ளது. அரசாங்கம் வழங்கிய தற்காலிக தங்குமிடம் இரண்டு வருடமாக பயன்படுத்தாமல் இருப்பதால் தற்போது அதை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீடு தயாரானதும் நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன். என்னுடைய மகள்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் தற்போது அந்த வீட்டிலேயே இருக்கிறேன். அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்வதற்கு என்னுடைய மனைவி அவர்கள் பக்கத்திலேயே இருக்கிறார். நானும் என்னுடைய மகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
