பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள அகம்குவா காவல் எல்லைக்குட்பட்ட பகதூர்பூர் ஹவுசிங் காலனியில், வியாழக்கிழமை அதிகாலை 5:52 மணியளவில் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. பாடலிபுத்ரா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியரான அருண் குமார் ஜாவின் மனைவி, தன் வீட்டின் முன்பு அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், அந்தப் பகுதியை பலமுறை சுற்றி வந்து நோட்டமிட்ட பிறகு, திடீரென அந்த முதிய பெண்ணை நெருங்கி அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அதிவேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் முழுவதும் அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்புக் கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குற்றம் புரிந்த இரு நபர்களின் முகங்களும், அவர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் எண்ணும் BR01-E-07897 தெளிவாகத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பேராசிரியர் அருண் குமார் ஜா, இந்த ஆதாரங்களுடன் உள்ளூர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் தங்களது வீட்டின் மின்சாரக் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாலை வேளையிலேயே கொள்ளையர்கள் எவ்வித பயமுமின்றிப் பெண்களைக் குறிவைத்து இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது, பாட்னாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியையும், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள அகம்குவா காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை முதன்மை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை விரைந்து கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…