ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் நர்வானாவில் மாடல் டவுன் பார்க்கில் நடந்து கொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத்தலைவர் பிரமோத் சர்மாவின் மனைவி சுமன் சர்மா நடந்துய் சென்று கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் பின்னாள் வந்து ஒன்றரை பவுன் எடையுள்ள தங்கச் சங்கலியை பறித்து சென்றுள்ளார்கள். அந்த சங்கிலியின் விலை சுமார் 1.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் முழுவதும் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சம்பவத்திற்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இது குறித்து பிரமோத் சர்மா கூறுகையில், “என்னுடைய மனைவி வழக்கம் போல நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு அடையாளம் தெரியாத இளைஞர்கள் வந்து அவருடைய கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்கள். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…