சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CLRI), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்நுட்பத் துறையின் (DST) பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளானது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில் புராஜெக்ட் அசோசியேட் (Project Associate), சீனியர் புராஜெக்ட் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் எம்.எஸ்சி (M.Sc), பி.இ (B.E), பி.டெக் (B.Tech) அல்லது எம்.பி.ஏ (MBA) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். பணி மற்றும் தகுதிக்கு ஏற்ப மாதம் 25,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை ஊதியம் மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுடையவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நேரடியாக சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை அடையாறு அலுவலகத்திற்குச் சென்று தேர்வுகளில் பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வின் போது கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை போன்ற தேவையான ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களைக் கொண்டு வருவது அவசியமாகும். வயது வரம்பு மற்றும் இதர விரிவான தகவல்களை CLRI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அரசு ஆய்வுத் திட்டங்களில் பணிபுரிய விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
