இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மக்களை ஏமாற்றும் வகையில் பல கோடி செய்திகளும் இணையத்தில் அவ்வப்போது உலா வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் இந்தியாவில் சில மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அது அனைத்து மாநிலங்களும் வழங்காமல் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் தான் வழங்கப்படுகின்றன. இப்படியான நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதனை மறுத்து மத்திய அரசின் உண்மை சரி பார்ப்பகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இலவச லேப்டாப் குறித்து வெளியான செய்தி உண்மையில்லை என்றும் அது வதந்தி என்பதால் அந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
