மத்திய, மாநில அரசுகள் மற்றும் சில அமைப்புகளும் பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. 2025 பொறியியல் கல்லூரி சேர்க்கை உதவித்தொகை திட்டங்கள் இயங்கிவருகிறது. பொறியியல் சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் [TNEA] ஒற்றைச் சார்ந்த முறையில் தொழில் படிப்புகளில் சேரும்போது கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. கல்வி கட்டணம், விடுதி கட்டணம், கலந்தாய்வு கட்டணம் என அனைத்து கட்டணங்களும் அடங்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பொறியியல் கனவை நினைவாக்கிக் கொள்ளுங்கள். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் அண்ணன் தங்கையோ ஏற்கனவே இச்சலுகையை பெற்றிருக்கக் கூடாது.
அரசு உதவி பெறும் தனியார் சுயநிதி ஒற்றை சாரல முறை மூலம் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.(AICTE) அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமம் மூலம் தனியார் கல்லூரிக்கு தங்கள் மொத்த இடங்களில் குறைந்தது 5% இடங்களுக்கு பாடநெறி வாரியாக கல்விக் கட்டண சலுகை அழிக்க வேண்டும். இந்த கட்டணத்தை தனியார் கல்வி நிறுவனங்கலே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் குடும்பத்தின் வருமானம் ஆண்டிற்கு 6 லட்சத்திற்கும் மிகாமல் உள்ள மாணவர்களே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். தகுதி உள்ளோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 10ஆம் வகுப்பிற்கு பின் வரும் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உள்ளோர் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் கனவை நினைவாக்குங்கள். இத்திட்டத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் செயல்படும் உதவி சேவை மைய எண் 1800 425 0110 ஐ தொடர்பு கொள்ளுங்கள். பொறியியல் சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவ மாணவிகள் வங்கி கடனை மட்டும் நம்பி இருக்காமல் அரசின் உதவி திட்டங்களில் விண்ணப்பித்து உங்கள் கனவை நினைவாக்கிக் கொள்ளுங்கள்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…