அனைத்து CBSE பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று CBSE புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் கழிவறையை தவிர்த்து நுழைவு மற்றும் வெளியேறும் வழி, வகுப்பறைகள், மாடிப்படி, கேன்டீன், ஸ்டோர் ரூம், விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து பொது இடங்களிலும் ஆடியோ மற்றும் வீடியோவுடன் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
