“சொட்டு நீர் கூட தர முடியாது”…. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு…. அதிரடி முடிவை கையில் எடுத்த கர்நாடக அரசு… பந்த் அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில வேளாண் சங்கங்கள் நாளை தென் கர்நாடக மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளன.

இந்த பந்த் போராட்டத்தால் பெங்களூரு, மாண்டியா, மங்களூரு மற்றும் குடகு உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கொதித்தெழுந்துள்ள நிலையில், மற்றொருபுறம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் அம்மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.