செல்போனில் சார்ஜ் குறைந்துவிடுவது பலருக்கும் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் பலரும் தங்களது செல்போனை ஒரு நாளைக்கு பலமுறை சார்ஜ் செய்கிறார்கள். பேட்டரி லெவல் 20க்கும் குறைவாக இருக்கும் போது பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்படும். 20க்கு கீழ் வரும்போது உடனே போனை சார்ஜ் செய்ய வேண்டும். 80 முதல் 90 பாயிண்ட் வரைதான் சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையாக 100க்கு மேல் சார்ஜ் செய்தால் சில நேரங்களில் போன் வெடித்துவிடும் அபாயம் உள்ளது.
செல்போனை சார்ஜ் செய்யும் போது 20 -80 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது பேட்டரி 20 பாயிண்ட் இருக்கும் போது அதை சார்ஜ் செய்ய வேண்டும். 80 பாயிண்ட் உயர்ந்த பிறகு சார்ஜை அகற்றி விட வேண்டும். இது தெரியாமல் பலரும் 100 பாயிண்ட் வரை செல்போனை சார்ஜ் செய்யும் போது அது சில நேரங்களில் வெடித்து விடுகிறது. சிலர் இரவு முழுவதும் போனை சார்ஜில் போட்டு விடுவதும் வெடிக்க முக்கிய காரணமாகிறது.
