அமெரிக்காவில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட பூனை ஒன்று, தனக்குப்பிடித்த உணவு கிடைக்காத ஆத்திரத்தில் தன் சொந்த உரிமையாளரையே தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கணவர் இல்லாத காரணத்தால் பூனைக்கு வழக்கமான பிடித்த உணவு கிடைக்காமல் போகவே, சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு எதுவும் உண்ணாமல் இருந்துள்ளது.
அறைக்குள் நுழைந்த பெண்ணை மேசையிலிருந்து பாய்ந்து வந்த பூனை திடீரெனக் கடுமையாகத் தாக்கியுள்ளது. எப்படியோ தப்பியோடிய அந்தப் பெண் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். “பிராணிகளைச் சரியாகப் பராமரிக்கத் தெரியவில்லை என்றால் எதற்காக அவற்றை வளர்க்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பிய இந்தச் செய்தி தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
