இனி 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்… அக்டோபர் முதல் அமலாகும் புதிய நடைமுறை..!

By Srimathi on ஆவணி 14, 2025

Spread the love

அக்டோபர் 4ஆம் தேதி முதல், காசோலைகளை வங்கிகளில் சமர்ப்பித்த சில மணி நேரங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கில் பணத்தை வரவு வைக்க ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது வங்கிகளில், ஒரு நாளில் பெறப்படும் அனைத்து காசோலைகளையும் சேர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் பரிவர்த்தனைகள் அனுப்பப்படுகின்றனர். இதனால் காசோலைக்கான பணம் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வந்தடைய ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேலாகிறது.

இனி காலை 10 மணி முதல் பிற்பகல் 4:00 மணி வரை காசோலை சமர்ப்பிக்கப்பட்டவுடன் பரிவர்த்தனைக்கு அனுப்பி, பணம் உடனடியாக வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்த உள்ளனர். முதல் கட்டத்தில் அக்டோபர் 4 முதல், அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை, காசோலைக்கான பணத்தை வழங்கும் வங்கிகள், தினசரி 7 மணிக்குள் சரிபார்த்து, பணம் கொடுக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்தப்பட்ட காசோலைகள், அங்கீகரிக்கப்பட்டதாக கருதி , 1 மணி நேரத்திற்குள் பணம் அனுப்பப்படும். இரண்டாம் கட்டத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதிக்கு மேல், காசோலைகளை உறுதிப்படுத்தும் கால அவகாசம் 3 மணி நேரமாக குறைக்கப்படும். மேற்கொண்ட புதிய திட்டத்தால், காசோலை பரிவர்த்தனை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.