சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் சென்னைக்குட்பட்ட தி.நகர் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி பரப்புரை செய்யாமல் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாகப் புகார் எழுந்தது.
இந்த ஊர்வலத்தால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகள் மீறப்பட்டதாகவும் கூறி விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ள விஜய்க்கு எதிரான இந்த நடவடிக்கை அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
