ஐயோ.. பார்க்கவே பதறுது…! தெருவில் விளையாடி குழந்தை மீது ஏறி சென்ற கார்… கதறி அழுத தாய்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சிசிடிவி காட்சிகள்…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

தெருவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையின் மீது வெள்ள நிற சுவிப்ட் கார் ஒன்று ஏறிச் சென்றுள்ள கொடூரமான காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. காரின் சக்கரத்தில் குழந்தை சிக்கிய பிறகும், வாகனம் செலுத்திய நபர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். குழந்தையின் அலறல் குரலைக் கேட்டு உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள், காயமடைந்த குழந்தையை மீட்டு உதவி செய்தனர்.

இக்காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களை இயக்கும் போது சற்று கவனக்குறைவாக இருந்தாலும் அப்பாவி உயிர்களுக்குப் பெரும் ஆபத்து நேரிடும் என்பதற்கு இச்சம்பவமே சான்றாகும். விபத்து நேரிட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்திப் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதே மனிதநேயம் மற்றும் சட்டப் பூர்வமான கடமையாகும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.