ஐயோ கடவுளே… கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த கார்… துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்… பெங்களூரில் அரங்கேறிய கோர விபத்து…!!

By Swetha on புரட்டாதி 18, 2026

Spread the love

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச் சென்ற அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முதலில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைகுலைந்து மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த அஞ்சனா (32) என்ற பெண்ணுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் தீவிர காயங்களும் அடைந்தார். விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

https://twitter.com/HateDetectors/status/2100892892273545517/video/1

   

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மண்டியா மத்திய காவல் நிலைய போலீசார் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.