பிம்பரி-சிஞ்ச்வட்டின் சிகாலி பகுதியில் உள்ள சிவ் சாலையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே, ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஆடம்பர மெர்சிடிஸ் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. காரின் என்ஜின் மற்றும் போனெட் பகுதியில் பிடித்த இந்தத் தீ, சில நிமிடங்களிலேயே முன் பகுதி முழுவதிலும் வேக பரவியது. பெட்ரோல் பங்கிற்கு மிகவும் அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.
தகவலறிந்த பிம்பரி-சிஞ்ச்வட் மாநகராட்சி தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கோ அல்லது பிற பகுதிகளுக்கோ பரவாமல் தடுத்து, சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முழுமையாக அணைத்தனர். தீயணைப்புத் துறையின் துரிதமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
https://twitter.com/VaradBhatkhande/status/2088927035800293410/video/1
இந்த விபத்தில் மெர்சிடிஸ் காரின் என்ஜின் மற்றும் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. காரின் என்ஜின் பகுதியில் தீப்பிடித்ததற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
