மகாராஷ்டிராவில் ஒருவரின் காரை ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் மோதி சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையை அழைத்தும் யாரும் வராததால், ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் காரை சரிசெய்ய கேரேஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்றதும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர் காவல் நிலையத்திற்குச் சென்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்.
காவல்துறையினர் முறையான எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்து, காப்பீட்டுத் தொகையை மட்டும் பெற்றுக்கொள்வதாகக் கூறி காலம் தாழ்த்தியுள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார் உரிமையாளர், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தியதோடு, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுவதைக் குறிப்பிட்டு ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அவரது பேச்சைக் கேட்ட பெண் காவலர் ஒருவர் உடனடியாக ஒரு நகலைக் கொடுத்து விவரங்களை நிரப்பச் சொல்லியுள்ளார். அதைக் கண்டவுடன் அந்த நபர் கோபம் தணிந்து அமைதியடைந்து, தப்பியோடிய இருவரையும் உடனடியாகப் பிடித்து தனது பணத்தை மீட்டுத் தருவதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…