“ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணை வெறிக்க வெறிக்க பார்த்த கார் ஓட்டுநர்…” அடுத்த நொடியே நிகழ்ந்த கொடூர விபத்து…. சாலையில் அரங்கேறிய பரபரப்பு நாடகம்…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

சாலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவரைத் தொடர்ந்து வெறித்துப் பார்த்தபடி கார் ஓட்டிச் சென்ற வாலிபர் ஒருவர், அடுத்த சில விநாடிகளிலேயே முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த சிரிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மின்சார ஸ்கூட்டரில் சென்ற பெண்ணைக் கண்டதும், கார் ஓட்டுநர் தனது கவனத்தைச் சாலையில் செலுத்தாமல் வலதுபுறமாக அந்தப் பெண்ணையே இடைவிடாமல் சைட் அடித்துக்கொண்டு சென்றுள்ளார். வேகம் குறைவாக இருந்தபோதிலும், கவனம் முழுவதும் பெண் மீதே இருந்ததால், வெறும் 2 மீட்டர் தூரத்திற்குள் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு வெள்ளை நிறக் காரின் பின்புறம் தனது காரை கொண்டுபோய் பலமாக மோதியுள்ளார்.

   

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்து சுமார் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணை வெறித்துப் பார்க்கப்போய் நஷ்டமடைந்த ஓட்டுநரின் இந்தச் செயலை இணையவாசிகள் “கவனம் சிதறினால் விபத்து நிச்சயம்” என்று கிண்டலடித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.