கார், வீட்டு கடன் வாங்கியிருக்கீங்களா…? வெளியான செம குட் நியூஸ்…!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

நீங்கள் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் வாங்கியவராக இருந்தால், வரும் டிசம்பர் மாதம் முதல் உங்கள் மாதத் தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் (RBI) கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் அறிக்கையின்படி, வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) வரை குறைப்பு இருக்கலாம். தற்போது 5.50% ஆக உள்ள ரெப்போ விகிதம் 5.25% ஆகக் குறைந்தால், வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும். இது நேரடியாகச் சாமானிய மக்களின் EMI சுமையைக் கணிசமாகக் குறைக்கும்.

   

உதாரணமாக, 20 வருட கால அவகாசத்தில் ரூ. 10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு, வட்டி 9% இலிருந்து 8.75% ஆகக் குறைந்தால், மாதம் சுமார் ரூ. 142 சேமிக்கலாம். அதேபோல், ரூ. 50 லட்சம் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 835 வரை சேமிப்பு கிடைக்கும்.

   

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை வட்டி விகிதத்தைக் குறைத்த நிலையில், டிசம்பரில் இந்த மூன்றாவது குறைப்பு வந்தால், பொதுமக்களுக்குக் கணிசமான நிதி ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.