தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.
ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 2000 களுக்குப் பிறகு அரசியலுக்கு சென்ற அவர் சினிமாவில் நடிப்பதைக் குறைத்தார். உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னமும் அவர் பற்றி பலரும் பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
அந்த அளவுக்கு எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்ற ஒரு மனிதராக விஜயகாந்த் வாழ்ந்து மறைந்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சொல்லப் போனால் ஒன்றல்ல இரண்டு. விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு 4K ரெசல்யூஷனில் ரி ரிலீஸாகவுள்ளது. அதே போல மற்றொரு சூப்பர் ஹிட்டான ‘வல்லரசு’ திரைப்படம் ரி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…