Connect with us

பசங்க மேல இவ்ளோ பாசம் வச்சிருந்தாரா கேப்டன் விஜயகாந்த்… கண்கள் பனிக்க அவரே சொன்ன பதில்!

CINEMA

பசங்க மேல இவ்ளோ பாசம் வச்சிருந்தாரா கேப்டன் விஜயகாந்த்… கண்கள் பனிக்க அவரே சொன்ன பதில்!

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

   

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 1991 ஆம் ஆண்டு விஜயகாந்துக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு அடுத்த ஆண்டு அவரின் மூத்த மகனான விஜய பிரபாகரன் பிறந்தார். அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு சண்முக பாண்டியன் பிறந்தார்.

   

மகன்கள் பிறந்தபிறகு தனது வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் ஒன்று நடந்ததாக விஜயகாந்த் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் “என் மகன்கள் பிறந்ததில் இருந்து 6 வயது ஆகும் வரை அவர்களோடு விளையாடி மகிழ்ந்தது போல வேறு எந்த சந்தோஷமும் இல்லை. அவர்கள் பிறந்த பின்னால் நான் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்தேன். ஒரு வயசுக்குப் பிறகு அவர்கள் நாம் அவர்களோடு இருந்தால் மட்டும் போதும் என நினைத்தார்கள். ஆனால் நாம் வீட்டில் இல்லாவிட்டால் அவர்களுக்கு வருத்தமாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.

 

More in CINEMA

To Top