#image_title
எல்லா உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. ஒரு மனிதன் நாள் முழுவதும் வேலை செய்கிறான். அன்றைய பொழுது நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே மறுநாள் நம்மால் சீராக இயங்க முடியும். அப்படி சரியான தூக்கம் இல்லை என்றால் அது பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். அப்படி உங்களுக்கு நீண்ட நேரம் தூக்கம் வராமல் இருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
நீங்கள் தூங்குவதற்கு முன்பு எப்பொழுதும் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். பெரும்பாலான மக்கள் டிவி, மொபைல் போன், லேப்டாப், போன்றவை பார்ப்பதே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல தூக்கம் வருவதற்கு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இந்த தொழில்நுட்ப சாதனங்களை தள்ளி வைத்து விட வேண்டும். அதனால் ஏற்படும் கதிர்வீச்சுகள் நம் மூளையை பாதித்து தூக்கம் வராமல் தடுக்கும். இதனால் தூக்கம் வருவது காலதாமதம் ஆகும்.
இரவு 7 மணியிலிருந்து எட்டு மணிக்குள் உணவருந்தி விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே உங்கள் இரவு உணவை முடித்து விட வேண்டும். இரவு உணவு சாப்பிட உடனே படுக்கவோ தூங்கவோ கூடாது. நீங்கள் தூங்கும் நேரத்தை ஒரு சரியான நேரம் 9:30 போன்று வழக்கத்தை கொண்டு வாருங்கள். தினமும் ஒன்பது முப்பதுக்கு படுக்கைக்கு சென்று விட வேண்டும் என்ற பழக்கத்தை கொண்டு வாருங்கள்.
தூங்குவதற்கு முன்பு மெல்லிய இனிய இசை கொண்ட பாடல்களை கேட்டால் நல்ல தூக்கம் வரும். அதிக ஓசை ஒலி தரக்கூடிய நவீன பாடல்களை கேட்கக்கூடாது. அடுத்ததாக நண்பர்கள் உறவினர்களிடம் போனில் வாட்ஸ் அப்பில் பேசுவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் ஒருவரிடம் உரையாடி கொண்டிருக்கும்போது அந்த சுவாரசியத்தினால் வருகின்ற தூக்கமும் திரும்பி சென்று விடும்.
தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் நல்ல புத்தகங்களை படிப்பது ஒரு சிறந்த வழியாகும். ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்கும்போது நம் சிந்தனையாவது ஒருங்கிணைத்து அந்த புத்தகத்தில் உள்ளே செல்லும். அப்போது அது நமக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். இது தவிர நிலவின் ஒளியில் வாக்கிங் செல்லலாம். இரவில் லேசான வெதுவெதுப்பான நீரினால் குளிப்பதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…