அய்யயோ… குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த பேரதிர்ச்சி…! கேஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகிறதா…? மத்திய அரசு அதிரடி…! பின்னணி என்ன…?

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

அமெரிக்கா – ஈரான் போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, எல்பிஜி விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. இதனால் 2026-2027 நிதியாண்டில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானியத்திற்காக அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு பட்ஜெட்டில் ரூ 30,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், சுமார் ரூ 70,000 கோடி வரை கூடுதல் நிதி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்தாலும், பணவீக்கத்தின் தாக்கம் ஏழை எளிய மக்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் மத்திய அரசு சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்ய அரசு கூடுதல் மானியம் வழங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பட்ஜெட் ஒதுக்கீட்டை விட செலவு அதிகரித்தாலும், பின்னர் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

   

எல்பிஜி மானியம் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மானியத்தை நிறுத்துவது குறித்து மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இக்கட்டான சூழலிலும் கூடுதல் நிதி மறுசீரமைப்பு மூலமே அரசு இச்சுமையைச் சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி எரிவாயு மானியம் குறைக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.