நீங்கள் அடிக்கடி வெந்நீரில் தலைக்கு குளிப்பவர்களா?… அப்போ இந்த ஆபத்து நிச்சயம்… இனி இந்த தப்ப பண்ணாதீங்க…!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

பொதுவாகவே குளிர்காலம் வந்துவிட்டால் நாம் அனைவரும் வெந்நீரை தான் தேடுவோம். காலம் மாறும்போது எப்படியாவது நம்முடைய பழக்கவழக்கங்களும் மாறிவிடுகிறது. அது உணவாக மட்டுமல்ல வேறு எந்த பொருளாக இருந்தாலும் அப்படித்தான். குறிப்பாக குளிர்காலத்தில் எழுந்ததும் சூடான தேநீர் மற்றும் சூடான குளியல் வேண்டும் என்றுதான் அனைவருமே நினைப்போம். குளிர்காலத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் சோர்வை போக்கவும் சூடான நீர் சிறந்த வழி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் குளிர்ந்த நீரை விட சூடான நீரை பயன்படுத்தினால் அது நம்முடைய தலைமுடிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் சூடான நீரில் குளிக்கும் போது தலையில் இருக்கக்கூடிய இயற்கை எண்ணெய்கள் நீக்கப்படுகின்றது. இது தவிர நம்முடைய உச்சந்தலையில் இருக்கக்கூடிய முடி அதிகமாகவே சேதம் அடையும். அதன் முக்கிய காரணம் தண்ணீர் மிகவும் சூடாக இருக்கும் போது அதனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உச்சந்தலையில் எண்ணெய்கள் நீக்கப்பட்டு முடி சேதமடையும். இயற்கை எண்ணெய் தலைமுடி மென்மையாகவும் நீரேற்றம் ஆகவும் மிகவும் அவசியம். இது அகற்றப்பட்டால் முடி வறண்டு போகும். இதனால் முடியின் வேர்கள் பலவீனமடையும். இதன் விளைவாக முடி உதிரத் தொடங்கிய உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வரும்.

   

அதிலும் முடிக்கு வண்ணம் பூசுபவர்கள் சூடான நேரில் குளித்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக நிறம் விரைவாக போய்விடும். எனவே தலைக்கு வண்ணம் தீட்டுபவர்கள் வெந்நீரை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம்முடைய முடியை சுமார் 95 சதவீதம் கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. நாம் நம்முடைய தலைக்கு வெந்நீர் பயன்படுத்தும் போது தலைமுடியில் இருக்கும் இந்த புரதம் அப்படியே இல்லாமல் போகும். இது ஆரம்பத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாக தோன்றினாலும் வெப்பம் காரணமாக உச்சந்தலை வறண்டு வீக்கம் அடையும் சூழல் உண்டாகும்.

   

இது முடி நுன்குழாய்களை பலவீனப்படுத்தி முடியை உதிர செய்யும். குளித்த பிறகு உங்களுடைய தலைமுடியை ஒரு துண்டை கொண்டு கடினமாக தேய்க்க வேண்டாம். இது பெரும்பாலும் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். உங்களுடைய தலை முடியை மெதுவாக உலர வைக்க மென்மையான பருத்தித் துண்டை பயன்படுத்துவது நல்லது. அப்படி இல்லை என்றால் ஒரு தூண்டில் கட்டி விடுங்கள். குளிர்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குளிப்பதை குறைக்கவும். இல்லையென்றால் உங்கள் தலைமுடி வறண்டு அதன் இயற்கை எண்ணைகள் இல்லாமல் போய்விடலாம். உங்கள் தலைமுடி வகையைப் பொறுத்து ஷாம்பு, கண்டிஷனர் மட்டும் எண்ணெய்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது.