தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைக் களைவதற்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படும் சிறப்பு குறைதீர் முகாம், இந்த மாதம் நாளை (பிப்ரவரி 14) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் (Taluk Offices) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, பெயர்களை நீக்குவது, முகவரி மாற்றம் செய்வது அல்லது செல்போன் எண்ணைப் புதுப்பிப்பது போன்ற திருத்தங்களை உடனடியாகச் செய்துகொள்ளலாம். மேலும், நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவது அல்லது பொருட்கள் விநியோகத்தில் உள்ள முறைகேடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் நேரடியாகப் புகாரளிக்கலாம்.
