இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளையும் போலி அழைப்புகளையும் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் திரையில் கட்டாயம் தோன்ற வேண்டும் என்று நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் சிம் கார்டு வாங்கும் போது சமர்ப்பிக்கப்பட்ட கேஒய்சி (KYC) ஆவணங்களின் அடிப்படையில் அழைப்பவரின் உண்மையான பெயர் மற்றும் தொலைபேசி எண் இனி அழைப்பை ஏற்பவர்களின் திரையில் நேரடியாகக் காட்சியளிக்கும். இப்புதிய தொழில்நுட்ப வசதியானது பொதுமக்கள் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் ஆபத்தான மோசடி அழைப்புகளை எளிதில் அடையாளம் கண்டு தற்காத்துக் கொள்ளவும், சைபர் குற்றங்களை அடிவேரோடு ஒழிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
