வேலுமணி – சிவி சண்முகம் மாஸ்டர் பிளான்”…. எடப்பாடியின் சர்வாதிகாரத்தால் அதிமுக காலி…. தவெக பக்கம் பாயும் மூத்த தலைவர்கள்?…. பரபரப்பு தகவல்…!

By Nanthini on ஐப்பசி 15, 2026

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகாரப் போக்கினால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் தனக்கு போட்டியாக வளர்ந்து வருகிறார் என்ற ஒற்றைக் காரணத்துக்காக எஸ்.பி. வேலுமணியை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஓரங்கட்டி வரும் எடப்பாடி பழனிசாமி, கூட்டங்களிலும் அவர் பேச அனுமதி மறுத்து வருகிறார். இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் செல்வாக்கைச் சிதைக்க உட்கட்சி வேலைகளில் ஈடுபடுவதாக வட மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். தலைமை மீதான இந்த தொடர் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத தங்கமணி, வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் தலைமையில் 28 எம்.எல்.ஏ.க்கள் தற்போது ஒன்று திரண்டுள்ளனர்.

“இனி எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி ஒருபோதும் உருப்படாது” என்ற அதிருப்தி முடிவுக்கு வந்துள்ள இந்த 28 எம்.எல்.ஏ.க்களும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காகச் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் இரகசியச் சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.