BREAKING: MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த ராஜினாமா முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் அவர் தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைத் தொடர்ந்து அதிமுகவின் மேலும் சில முக்கியப் பிரமுகர்கள் த.வெ.க-வில் இணையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.