அதிமுகவுக்கு பேரிடி..! எடப்பாடியை உதறிவிட்டு.. திமுகவில் இணைகிறார் சி.வி.விஜயபாஸ்கர்..? இன்னும் 2 நாளில் மெகா அதிர்ச்சி…!!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக விரைவில் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இவர் போர்க்கொடி தூக்கினார். மேலும், சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், இவருடைய புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த விஜயபாஸ்கர் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டார்.

ஆரம்பத்தில், அதிமுகவின் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்ததால் அங்குக் செல்லலாமா என்று தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்தார். ஆனால், தவெகவில் உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்ற ஆலோசனையாலும், அவர் மீதான ஊழல் புகார்கள் காரணமாகத் தவெக தரப்பில் காட்டிய தயக்கத்தாலும் அந்த முடிவு கைவிடப்பட்டது. தொடர்ந்து, அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைவது குறித்தும் பேசப்பட்டது. எனினும், அந்த இயக்கம் இன்னும் முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுக்காத சூழலில், அதில் இணைவதில் பல சிக்கல்கள் இருப்பதாக அவரது நலம்விரும்பிகள் அறிவுறுத்தியதால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டு, இறுதியாகத் திமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.

விஜயபாஸ்கரின் இந்த முடிவுக்குப் புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான ரகுபதி கடும் எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். எனினும், விஜயபாஸ்கரின் அரசியல் சாதுரியம் மற்றும் மாவட்டத்தில் அவருக்குள்ள செல்வாக்கைக் கணக்கிட்டுத் திமுக தலைமை அவரோடு சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதே நேரத்தில், ரகுபதியின் முக்கியத்துவம் குறைக்கப்படாது என்று அவருக்கும் தலைமை தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாகவும், அவருக்குப் புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Swetha

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

10 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

35 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

44 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

50 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

55 minutes ago