தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அதிரடி வருகையும், அதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைப்புச் செயலாளர் பதவியும் புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. அதிமுகவின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த அவர், தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்துவந்தார். தற்போது அவருக்கு உயர் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, “இனிமேல் தான் புதுக்கோட்டையில் உண்மையான கச்சேரி ஆரம்பம்” என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதேவேளையில், இந்த நியமனம் தவெகவின் உள்வீட்டுப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே அறந்தாங்கி தொகுதியின் தவெக முக்கிய நிர்வாகியான முகமது பர்வேஸ் தரப்பு, விஜயபாஸ்கரின் வரவால் தனது செல்வாக்கு சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தது. வெளிப்படையாக நலம் விசாரித்துக் கொண்டாலும், விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் பர்வேஸ் தரப்பு கவனமாக காய்களை நகர்த்தி வந்தது. ஆனால், தற்போது விஜயபாஸ்கருக்குக் கட்சிப் பொறுப்பு கிடைத்துவிட்டதால், மாவட்ட அரசியலில் அவரது ஆதிக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பர்வேஸ் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மற்றொருபுறம், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு உடனே உயர் பதவிகள் வழங்கப்படுவதால், ஆரம்பக்காலம் முதல் கட்சிக்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் உழைத்த முதன்மை நிர்வாகிகள் தங்களுக்கு உரிய மரியாதை மறுக்கப்படுவதாகக் கூறி கடும் அப்செட்டில் உள்ளனர். இதனால் புதுக்கோட்டை தவெகவில் ‘அதிமுகவிலிருந்து வந்தவர் அணி’ மற்றும் ‘ஆரம்பகால விஜய் ரசிகர் மன்ற அணி’ என இரண்டு கோஷ்டிகள் உருவாகி மோதி வருகின்றன. பதவி கிடைத்த உற்சாகத்தில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, போஸ்டர் அடித்து பிரம்மாண்டம் காட்டி வருவது இந்தப் பிளவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றிபெற விஜயபாஸ்கர் போன்ற செல்வாக்குமிக்க வலுவான தலைவர்கள் அவசியம் என்பதால் தான், புஸ்ஸி ஆனந்தின் ஆலோசனையின் பேரில் தவெக தலைவர் விஜய் இந்தப் பதவிகளை அறிவித்தார். இருப்பினும், கட்சியின் மூத்த தலைவருக்கு எதிராக உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் திரண்டு நிற்பது தவெக தலைமைக்கு பெரும் தலைவழியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உட்கட்சிப் பூசலையும் கோஷ்டி மோதலையும் உடனடியாகத் தீர்த்து வைக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரைவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…