எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் தங்களது eKYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. எரிவாயு உருளைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சமையல் எரிவாயு மானியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் தங்களின் சமையல் எரிவாயு முகவர் நிலையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைபேசி செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் வாயிலாக ஆன்லைனிலாே எளிய முறையில் இந்த eKYC பதிவை மேற்கொள்ளலாம். மேலும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்காங்கே சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் eKYC அப்டேட் செய்யத் தவறினால், எரிவாயு உருளை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவோ அல்லது இணைப்பு முற்றிலுமாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இச்சேவையை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…