கே பாக்யராஜ் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளகோவில் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். ஸ்ரீ ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்து தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் பாக்கியராஜ்.

திரைக்கதை எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர் பாக்யராஜ். அதற்காகவே இவர் பிரபலமானவர். 16 வயதினிலே திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் நடிகராக அறிமுகமானார் கே பாக்யராஜ். சிகப்பு ரோஜாக்கள் மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய இரண்டு படங்களில் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கே பாக்யராஜ்.
1979 ஆம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் பிறகு பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கே பாக்யராஜ் அறிமுகமான புதிய வார்ப்புகள் திரைப்படத்திற்கு வசனங்களை எழுதினார். இதற்காக சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.
1983 ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்திருந்தார் கே பாக்யராஜ். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்யராஜ் அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்த திரைப்படத்தில் வரும் முருங்கக்காய் சமாச்சாரம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இந்த படத்தில் தான் ஊர்வசி அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் இயக்கியும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் பிரபலமானார் கே பாக்யராஜ். ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட கே பாக்யராஜ் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களை பற்றி பேசி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாவுக்கு வந்த புதுசுல நாடக குழுவில் இருக்க நடிகர்கள் செந்திலை ரொம்ப கேவலப்படுத்துவாங்க. டேய் சொட்ட வா வந்து டீ வாங்கிட்டு வா அப்படின்னு தான் அவரை கூப்பிடுவாங்க. எனக்கு பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பா இவருக்கு நடிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும் அப்படின்னு எனக்கு தோனிட்டே இருந்தது. அப்புறம்தான் மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு படங்கள்ல செந்திலை நடிக்க வச்சேன். அவர நடிக்க வச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னோட படங்களை நடிச்சதுல அவருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்படின்னு மனம் திறந்து பேசி இருக்கிறார் கே பாக்யராஜ்.
