BREAKING: தவெக கூட்டணியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட்கள்?… திடீரென ஒன்று திரளும் கூட்டணி கட்சிகள்… பனையூரில் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கூட்டணி கட்சிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கவுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன.

வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படும் இக்கூட்டத்தில், கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ பெயரும் இன்று இறுதி செய்யப்பட உள்ளதால், தமிழக அரசியல் களத்தில் இக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பையும் கூடுதல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.