BREAKING: தவெகவுக்கு விசில் சின்னம்… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அவரது கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம்’விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான தவெக, பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அதனடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜய்க்கு, நிரந்தரச் சின்னம் கிடைத்தது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் ‘விசில்’ சின்னத்தை முன்வைத்து அக்கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது