“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?… ஒரு சிம் வாங்கினா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்… தெலுங்கானாவில் ஒரு செம சர்ப்ரைஸ்”…!!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் தம்மபேட்டாவில் மொபைல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள சலுகை இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. உலகளாவிய ஈரான் மோதல் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நிலவி வரும் நிலையில், ஏர்டெல் சேவை மையம் இத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பிற நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல்-க்கு மாறி ரூ.350-க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ‘ஜாக்பாட்’ சலுகையாக வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றாலும், இது வெறும் வியாபார உத்தி மட்டுமே என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகக் கடை உரிமையாளர்கள் தங்களின் லாபத்தைப் பணயம் வைத்து இப்போட்டியில் இறங்கியுள்ளனர். அதேவேளையில், தெலுங்கானா சிவில் சப்ளைத்துறை அதிகாரிகள் மாநிலத்தில் 45 நாட்கள் வரை தாராளமாகப் பயன்படுத்தும் அளவிற்கு 18,500 கிலோலிட்டர் எரிபொருள் இருப்பு உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். உலகளாவிய வதந்திகளால் மக்கள் பீதியடைந்து அதிகப்படியான பெட்ரோலை வாங்குவதே தற்காலிக நெருக்கடிக்குக் காரணம் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆந்திராவில் 1500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், 450 பங்க்குகள் மட்டுமே தற்காலிகமாகச் செயல்படவில்லை என அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், மக்களின் எரிபொருள் தேவையையும் அச்சத்தையும் ஒரு வியாபார வாய்ப்பாக மாற்றி, பெட்ரோலை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் இந்த மொபைல் கடையின் முயற்சி ‘ஸ்மார்ட் மூவ்’ ஆகப் பார்க்கப்பட்டாலும், இது சந்தைப் போட்டியின் உச்சத்தையே காட்டுகிறது.

Muthu Mani

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

34 minutes ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

44 minutes ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

47 minutes ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

1 மணத்தியாலம் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

1 மணத்தியாலம் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

1 மணத்தியாலம் ago