NEWS
நீங்க கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா?.. அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க.. இல்லனா உங்களுக்கு தான் பிரச்சனை..!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமாக மக்கள் முடித்து விடுகின்றனர். குறிப்பாக மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பதும் அதிகரித்து வருகிறது. அதிலும் கிரெடிட் கார்டு அதிக வட்டி உடையதாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அதனை நாடுகின்றனர்.
பொதுவாகவே ஒவ்வொரு நபருக்கும் வரவு செலவு என்பதை வித்தியாசமாக இருப்பதால் வங்கிகளில் சரியான கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். அதை எப்படி தேர்வு செய்து வாங்க வேண்டும் என்ற முறைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
- நீங்கள் அதிகமாக எதற்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள் என்று அறிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல நீங்கள் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதாவது மளிகை பொருட்கள் வாங்க அதிகமாக கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு ரிவார்டு மற்றும் பாயிண்டுகள் அள்ளித் தரும் கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும்.
- உங்களுக்கு ரிவார்டு சிறந்ததா அல்லது பாயிண்ட் சிறந்ததா என்பதை நிர்ணயித்து கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும்.
- பொதுவாக கிரெடிட் கார்டுகளில் வருடாந்திர கட்டணம் மற்றும் ஜாயினிங் கட்டணம் இருப்பதால் வட்டி விகிதத்தை அறிந்துகொண்டு கிரெடிட் கார்டை தேர்வு செய்வது நல்லது.
- நீங்கள் டிராவல்ஸ் மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் சலுகை வழங்கும் கார்டை நீங்கள் தேர்வு செய்யலாம்.
- ரிவார்ட் மற்றும் கேஷ் பேக் வழங்கும் வெல்கம் போனஸ் கார்டை தேர்வு செய்ய வேண்டும்.
- எனவே இனி நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கும்போது இந்த முறையை பயன்படுத்துங்கள்.