தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ. வெள்ளையன் (72) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். அதுமட்டுமின்றி இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
