மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக துபாயில் ஏராளமான இந்தியப் பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், தங்குவதற்கு இடமின்றியும் ஹோட்டல் கட்டணங்களைச் செலுத்த முடியாமலும் தவித்த இந்தியர்களுக்கு உதவ, துபாயைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் யோகேஷ் தோஷி (Yogesh Doshi) முன்வந்துள்ளார். அல் மிஜான் குழுமத்தின் (Al Mizan Group) தலைவரான இவர், தனது நிறுவனத்திற்குச் சொந்தமான 64 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முழு கட்டடத்தையும் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் தங்குமிடத்திற்காக வழங்கியுள்ளார்.
இந்த மனிதாபிமான நடவடிக்கையின் மூலம், துபாயில் தவித்து வரும் இந்தியக் குடும்பங்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஹோட்டல்களில் தங்குவதற்குப் போதிய வசதி இல்லாதவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தங்குமிடம் ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இந்த குடியிருப்புகளில் தங்கியுள்ளவர்கள் தங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் மற்றும் தொழிலதிபர் யோகேஷ் தோஷி ஆகியோரின் உதவியால் மிகுந்த ஆறுதல் அடைந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அஜ்மானைச் சேர்ந்த மற்றொரு இந்தியத் தொழிலதிபர் தீரஜ் ஜெயின் (Dhiraj Jain) என்பவரும் தனது 80,000 சதுர அடி பண்ணை வீட்டைப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காகத் திறந்து விட்டுள்ளார். அவர் சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதுடன், அவர்கள் தங்குமிடத்தை அடைய தனது சொகுசு கார்கள் மூலம் பிக்கப் (Pickup) வசதியையும் செய்துகொடுத்தார். இக்கட்டான சூழலில் இந்தியத் தொழிலதிபர்கள் காட்டியுள்ள இந்த உதவிக்கரம், உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் (Security Manager) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…
கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…