மும்பை தொழிலதிபர் ஒருவரின் வாட்ஸ்ஆப்பிற்கு டிராபிக் போலீஸாரின் ‘இ-செல்லான்’ போன்ற ஒரு போலி குறுஞ்செய்தி வந்துள்ளது. ஒரு திருமண நிகழ்வில் பிஸியாக இருந்த அவர், எவ்வித சந்தேகமும் இன்றி அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். அந்த நொடியே அவரது கைப்பேசியைச் சைபர் குற்றவாளிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவருக்கும், அவரது மனைவிக்கும் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 21 லட்ச ரூபாயை மர்ம கும்பல் திருடியுள்ளது.
பணம் பறிபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், மும்பை சைபர் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே என்ற கல்லூரி மாணவரின் கணக்கிற்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சூரத் சென்ற போலீசார் அந்த மாணவரைக் கைது செய்ததோடு, இதன் பின்னணியில் உள்ள பெரிய மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர். அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…