மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மைதானத்தின் புல்வெளியில் ‘Indians’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்த பகுதியின் மீது ஜஸ்பிரித் பும்ரா நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், நமது நாட்டின் பெயரைக் குறிக்கும் ‘Indians’ என்ற வார்த்தையைத் தரைமட்டத்தில் எழுதி, அதன் மேல் வீரர்கள் நடப்பது முறையாக இருக்காது என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு ரசிகர்கள் ஒரு முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். மைதானத்தில் முழுப் பெயரையும் எழுதுவதற்குப் பதிலாக, அணியின் சுருக்கமான பெயரான ‘MI’ என்பதை மட்டும் எழுதினால் போதும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் நாட்டின் பெயருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை உறுதிப்படுத்த முடியும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
Mumbai Indians should only write MI on ground with their normal MI logo. plz look into this @mipaltan pic.twitter.com/lFFENfA406
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) March 31, 2026
பும்ரா தற்செயலாக அதன் மீது நடந்து சென்றாலும், இது போன்ற நுணுக்கமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 2026 ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் மட்டுமின்றி மைதானத்தில் உள்ள இது போன்ற சிறிய விஷயங்களும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
