அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 7 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. புரூக்ளின் பகுதியில் உள்ள ஹம்போல்ட் மற்றும் மூர் வீதிகள் அருகே ஒரு குடும்பத்தினர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டதும் பதறிய தாய், தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த கடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். அங்குச் சென்று பார்த்தபோது, குழந்தை அமர்ந்திருந்த தள்ளுவண்டியில் (Stroller) ரத்தம் இருப்பதைக் கண்டு அவர் கதறித் துடித்துள்ளார்.
🚨BREAKING: NYC Mayor Zohran Mamdani speaks out after a 7-month-old girl was fatally hit in the head by a stray bullet during a broad daylight shooting in Brooklyn
A family was walking near Humboldt and Moore streets when gunfire suddenly broke out
The child’s mother heard the… pic.twitter.com/K4lvSRYbJf
— Unlimited L’s (@unlimited_ls) April 1, 2026
குறிதவறிப் பாய்ந்த தோட்டா குழந்தையின் தலையில் பலமாகத் தாக்கியிருந்தது. உடனடியாக வுட்ஹல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி மதியம் 1:46 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் இருவர் மோபட் வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது, இரண்டு தெருக்கள் தள்ளி விபத்துக்குள்ளாகினர். அதில் ஒருவர் பிடிபட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற்றொருவரைப் பிடிக்கப் போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
