உத்தரபிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தியில் பரசுராம் யாதவ் என்பவரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் “புல்டோசர் நீதி” என்பது சட்டவிரோதமானது என்றும், முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒருவரின் வாழ்விடத்தை அழிப்பது அடிப்படை உரிமை மீறல் என்றும் பலமுறை எச்சரித்துள்ளது.
மேலும் தங்குமிடம் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு குடும்பத்தின் தலைவன் குற்றச்சாட்டுக்கு உள்ளானாலே அல்லது ஆக்கிரமிப்பு என்ற பெயரிலோ, ஒரு ஏழைக் குடும்பத்தின் கூரையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, குழந்தைகளை நடுத்தெருவில் அழவிடுவது எந்தவொரு நாகரீக சமூகத்திற்கும் அழகல்ல.
“>
இதனால் நிர்வாக ரீதியாக இத்தகைய நடவடிக்கைகள் விரைவான தீர்வாகத் தோன்றினாலும், இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறது. நீதிமன்ற விசாரணையின்றி ஒரு அதிகாரியே நீதிபதியாக மாறி தண்டனை வழங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. குறிப்பாக, வசதியற்ற நிலையில் இருக்கும் எளிய மக்கள் இத்தகைய நடவடிக்கைகளால் நிர்க்கதியாக்கப்படும்போது, அது சமூக நீதிக்கே சவாலாக அமைகிறது.
இந்நிலையில் அரசின் கொள்கைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது மனிதாபிமானத்துடனும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். வீடிழந்த குழந்தைகளின் அழுகுரல், சட்டத்தின் ஓட்டைகளை விட வலிமையான கேள்விகளை நம் முன் வைக்கிறது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…