நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 21 தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்ட நிதி உயர்வு குறித்து தற்போது எந்த பரிசீலனையும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் 22 ஆவது தவணை 2000 ரூபாய் பிப்ரவரி மாதத்தில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
