“எனக்கு ஐபோன் வாங்கிக்கொடுங்க” அப்பாகிட்ட காசு இல்லமா… தந்தை எவ்ளோ சொல்லியும் கேட்காமல்… தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவி…!!

By Soundarya on மார்கழி 29, 2025

Spread the love
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள குஸ்மிலியா கிராமத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி மாயா, தனக்கு ஐபோன் வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் மற்றும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தும் அவரது தந்தை துளசிராம் ராஜ்புத்திடம், மாயா சுமார் 40,000 ரூபாய் மதிப்பிலான பழைய ஐபோன் ஒன்றை வாங்கித் தருமாறு பிடிவாதமாகக் கேட்டுள்ளார். தனது ஏழ்மை நிலையை விளக்கிய தந்தை, 15 நாட்களில் பயிர்களை விற்ற பிறகு வாங்கித் தருவதாக உறுதியளித்தும், அந்த மாணவி அதனை ஏற்க மறுத்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், மாயாவின் குடும்பத்தினரை மீளாத் துயரில் தள்ளியுள்ளது. தகவலறிந்து வந்த டகோர் காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடம்பரப் பொருட்கள் மீதான மோகம் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ள இச்சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே நிலவ வேண்டிய புரிதல் மற்றும் இன்றைய கால இளைஞர்களின் மனநல ஆரோக்கியம் குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.