பனிப்பாறை ஏரி உடைப்பு…! அவசர அவசரமாக வெளியேறிய புத்த துறவிகள்… திடீர் வெள்ளப்பெருக்கால் பீதி…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2026

Spread the love

இமயமலை நாடான பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, நள்ளிரவில் இருளில் புத்த துறவிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பூடானில் உள்ள ஷின்தாபு பனிப்பாறை ஏரி திடீரென உடைந்ததால், ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், அப்பகுதியில் உள்ள பாலங்கள், சாலைகள் மற்றும் வெந்நீர் ஊற்று மையங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. நிலைமையின் தீவிர உணர்ந்த அதிகாரிகள், நள்ளிரவிலேயே அப்பகுதியில் இருந்த புத்த துறவிகள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

   

இந்த பனிப்பாறை ஏரி உடைப்பின் தாக்கம் இந்திய எல்லையோர பகுதிகளிலும் எதிரொலித்துள்ளது. பூடானிலிருந்து சீறிப்பாயும் சன்கோஷ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்திற்கும் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.