ஐயோ கொடுமையே… நடுரோட்டுல வாளை தூக்கி என்னடா கெத்து?… தேசிய நெடுஞ்சாலையில் பிறந்தநாள் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on ஐப்பசி 31, 2026

Spread the love

உத்தரப் பிரதேசம் ஹப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் போனட்டின் மீது வாளால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்.எச்.-9 நெடுஞ்சாலையில் கார்களின் மீது பல கேக்குகளை வைத்து, நண்பர்களின் ஆரவாரத்துடன் வாலிபர் ஒருவர் வாளால் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்தக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் ஆபத்தான சாகசங்களும் செய்யப்பட்டுள்ளன. காரின் சன்னல் வழியாக வெளியே தொங்குவது மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் வண்டியை இயக்குவது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்; இது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தது.

   

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாபுபூர் காவல் நிலையப் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்து ரக்ஷா தளம் மாவட்டத் தலைவர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.