பகீர்… வரவேற்பு முடிந்த சில மணி நேரங்களில்… புதுமாப்பிள்ளை கொடூரக் கொலை… காதலித்து கரம் பிடித்த 15 நாட்களில் நேர்ந்த சோகம்…!!

By Swetha on ஆடி 17, 2026

Spread the love

பல்லாரி நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே, நபி ரசூல் (27) என்ற புதுமாப்பிள்ளை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். விவாகரத்தான ஒரு பெண்ணை, அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நபி ரசூல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணத்தை ரசூலின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு, வியாழக்கிழமை இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர், வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் நண்பர் ஒருவர் அழைப்பதாகக் கூறிவிட்டு நபி ரசூல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணி ஆகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில், பல்லாரி நகரின் பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் ரசூல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

   

இந்தக் கொலை குறித்து கௌல் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்தத் திருமணத்தில் இருந்த எதிர்ப்பே கொலைக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என போலீஸார் முதற்கட்டமாகச் சந்தேகிக்கின்றனர். பல்லாரி மாவட்ட எஸ்பி சுமேன் டி. பென்னேகர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாளிகளைக் கண்டறிய ரசூலின் போன் கால்கள் மற்றும் அப்பகுதி மக்களின் வாக்குமூலங்களை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.