திக் திக்… ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட… ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 4 பேர் கொடூரக் கொலை… பங்களாதேஷில் பதறவைக்கும் பயங்கரம்…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

வங்கதேசத்தில் 2024 ஆகஸ்ட் ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்களின் வரிசையில், ரங்க்பூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி குடும்பத்தினர் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 21-ந்தேதி நள்ளிரவு வீட்டின் மாடியில் வீரியமிக்க ‘யாபா’ போதைப்பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி பிரிதிலதாவும் அந்தப் போதை நபர்களால் உடனடியாகத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்டார்.

இரண்டு கொலைகளையும் அரங்கேற்றிய அந்த இருவரும், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது மகள் அகமியையும், 12 வயது மகன் பிரியமுத்தையும் துரத்தித் துரத்தி வெட்டிக் கொன்றனர். சாட்சிகளை அழிக்கவும், அடையாளம் காண முடியாதவாறு செய்யவும் நால்வரின் முகங்களிலும் ரசாயனத்தை ஊற்றி எரித்தனர். இக்கொலைச் சம்பவத்தை ஒரு தோல்வியடைந்த கொள்ளை முயற்சி போலக் காட்ட முயன்ற கொலையாளிகள், பீரோக்களை உடைத்து நகைகளைத் திருடியதுடன் வீட்டின் பொருட்களைச் சிதறடித்தனர்.

   

இதன்பிறகு எந்தவித அவசரமும் இன்றி நிதானமாக வெள்ளிக்கிழமை காலை வரை வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்து அங்கு குளித்துவிட்டு, மேசையில் இருந்த பேரீச்சம்பழங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்திய ரங்க்பூர் பெருநகர காவல்துறை மற்றும் துப்பறியும் பிரிவினர், இக்கொலையில் தொடர்புடைய சித்தார்த்த தாஸ் மற்றும் முக்தா தாஸ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்; மேலும், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.