பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் 21 வயதான அபிமன்யு, பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியனின் 12 வயது மகளுக்கு, கல்லூரி மாணவர் அபிமன்யு செல்போன் வாங்கித் கொடுத்து தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியன் இரும்புக்கம்பியால் தாக்கி, அபிமன்யுவை கத்தியால் குத்தி கொன்றதாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
