ஐயோ நெஞ்சு வலிக்குதே… கதறியபடி சரிந்த MTC டிரைவர்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 15, 2026

Spread the love

ராமபுரத்தில் விநயாகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலில் எம்.டி.சி பேருந்து ஓட்டுநர் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேஸ்வர நகரில் உள்ள அருள்மிகு ராஜா கணபதி கோவிலில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கிய ஊர்வலம் 13-வது தெருவை அடைந்தபோது, தேர் செல்லும் பாதை குறித்து இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இருப்பினும், நள்ளிரவு 12 மணியளவில் புவனேஷ் தலைமையிலான கும்பல், 2-வது மெயின் ரோட்டில் உள்ள அனீஸ் என்பவரின் வீட்டிற்குச் சென்று அவரை வெளியே அழைத்துத் தகராறில் ஈடுபட்டது. இந்த மோதலின் போது, ஆனந்த் என்பவர் பின்னால் இருந்து எம்.டி.சி பேருந்து ஓட்டுநரான சீனிவாசன் என்பவரின் நெஞ்சில் பலமாகத் தாக்கினார். இதில் சுருண்டு விழுந்து சுயநினைவை இழந்த சீனிவாசனை, அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

   

பின்னர் மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சீனிவாசனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராமபுரம் காவல்துறையினர், இரு தரப்பையும் சேர்ந்த ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.