யார் அந்த பெண்?… எதற்காக முகத்தில் ஆசிட்?… ஏரிக்கரையில் சிக்கிய செல்போன்… விலகும் மர்ம முடிச்சுகள்… வெளியான பகீர் தகவல்கள்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தொட்டாரெட்டிகுப்பம் ஏரிக்கரை பகுதியில், 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் அப்பெண்ணின் அடையாளத்தை மறைக்கும் நோக்கில் அவரது முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற உள்ளூர் இளைஞர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் கிடந்த பகுதி சமூக விரோதிகள் கூடும் இடம் என்பதால், கொலை அங்கேயே நடந்ததா அல்லது வேறு எங்கேனும் வைத்து கொன்றுவிட்டு உடலை இங்கு வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய தடயமாக சம்பவ இடத்திலிருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நேற்றிரவு சுமார் 7.41 மணிக்கு அங்கிருந்து செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்பு ஒன்றின் பின்னணியையும் சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதுதவிர அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தரவுகளைக் கொண்டு உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தைக் காணும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமீப நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பொதுமக்களிடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை, இந்த ஆசிட் வீச்சுப் படுகொலை மேலும் அதிகரித்துள்ளது.